சுல்தான்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது


சுல்தான்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
x

சுல்தான்பேட்டை அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் ஏட்டு ராமகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் செஞ்சேரிப்பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்த செஞ்சேரியை சேர்ந்த ரமேஷ் (வயது 44), ரங்கசாமி (63) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யபட்டது.

1 More update

Next Story