மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x

வடமதுரை அருகே மதுபானம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது காணப்பாடி அருகே உள்ள ஆலமரத்து பிரிவு, ஏ.வி.பட்டி ரோடு பகுதிகளில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக வி.சிங்காரக்கோட்டையை சேர்ந்த கணேசன் (வயது 44), வடமதுரை தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திவேல் (42) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 122 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story