மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x

மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

விராலிமலை:

விராலிமலை தாலுகா ராஜாளிபட்டி பகுதியில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விராலிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜாளிபட்டி கடைவீதி பகுதியில் மதுபாட்டில்களை விற்று கொண்டிருந்த பாட்னாபட்டியை சேர்ந்த சின்னக்காளை மகன் பொன்னன் (வயது 35) என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் ராஜாளிபட்டி மாரியம்மன் கோவில் அருகே மதுவிற்ற காரடைக்கன்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். ேமலும் அவர்களிடமிருந்து 21 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story