சாராயம், மது விற்ற 2 பேர் கைது


சாராயம், மது விற்ற 2 பேர் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே சாராயம், மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த புதுப்பேட்டை மற்றும் வெலக்கல்நத்தம் பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புதுப்பேட்டை பகுதியில் உள்ள சுடுகாட்டில் அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வெலக்கல்நத்தம் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக அவரையும் போலீசார் கைது செய்து, 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story