சாராயம் விற்ற 2 பேர் கைது
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாராய விற்பனை
கீழ்வேளூர் அருகே வெண்மணி ஊராட்சி பகுதியில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அக்பர் அலி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழகாவாலக்குடி அம்மன் கோவில் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கீழகாவாலக்குடி, துளசியாபுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 63) என்பதும், அவர் அந்த பகுதியில் சாராயம் விற்றதும் தெரியவந்தது.
2 பேர் கைது
இதையடுத்து போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதேபோல கீழகாவாலக்குடி காளவாய்கரை அருகில் சாராயம் விற்ற, காவாலக்குடி காலனி தெருவை சேர்ந்த சிவராஜன் மகன் ரதீஸ் (33) என்பவரையும் போலீசாா் கைது செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.