மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x

மதுவிற்ற 2 பேர் கைது

தஞ்சாவூர்

கபிஸ்தலம்:

சுவாமிமலை போலீஸ்இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் மற்றும் போலீ்சார் சுவாமிமலை பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவாமிமலை அருகே கோணகரை பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்கள் விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், சுவாமிமலை மேலவீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சந்தானகிருஷ்ணன் (வயது35), மாங்குடியை சேர்ந்த முருகதாஸ் மகன் விக்னேஷ் (28) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story