போதை காளான் விற்ற 2 பேர் கைது


போதை காளான் விற்ற 2 பேர் கைது
x

கொடைக்கானலில், போதை காளான் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் இளைஞர்களை குறி வைத்து, சமூக வலைத்தளங்கள் மூலம் போதை காளான்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி தலைமையில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் மற்றும் போலீசார் மலைக்கிராமங்களில் அதிரடி சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது மன்னவனூர் கைகாட்டி பகுதியில் போதை காளான்கள் விற்பனை செய்த 2 பேரை பிடித்தனர். விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை மாவட்டம் கூரைக்காடு பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 22), கொடைக்கானல் பூண்டி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (31) என்பது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து போதை காளான்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story