புகையிலை விற்ற 2 பேர் கைது


புகையிலை விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:30 AM IST (Updated: 8 Sept 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

புகையிலை விற்ற 2 பேர் கைது

நீலகிரி

ஊட்டி

ஊட்டி முத்தோரை கீழ்க்கவ்கட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஊட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையிலான போலீசார் கடைக்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. மேலும் ஊட்டி மார்க்கெட்டில் கடை வைத்துள்ள செல்வராஜ் என்பவர் புகையிலை பொருட்களை விநியோகம் செய்தது தெரியவந்தது. 2 பேரிடம் இருந்து மொத்தமாக 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

1 More update

Next Story