புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

ஜோலார்பேட்டை அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி ஊராட்சி மூர்த்தியூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 48). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்தநிலையில் இவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சென்று கடையில் சோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் ராஜாவை கைது செய்து, புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் வாலாட்டியூர் காந்திரோடு பகுதியை சேர்ந்த செல்வம் (55) என்பவரது பெட்டிக் கடையிலும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, செல்வத்தை கைது செய்தனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story