புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
கோத்தகிரி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் குணா தலைமையிலான போலீசார் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அரவேனு தவிட்டுமேடு பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் (வயது 52) என்பவரது பெட்டிக்கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கொட்டக்கம்பை பகுதியில் சண்முகம் (70) என்பவரது டீ கடையில் விற்பனைக்காக புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.