சாராயம் கடத்திய 2 பேர் கைது
சாராயம் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம்
தலைவாசல்:
தலைவாசல் அருகே எலந்தவாரி ஓடை அருகில் ஆத்தூர் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வேகமாக வந்த 2 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஒவ்வொரு மோட்டார் சைக்கிளிலும் தலா 5 லாரி டியூப்பில் தலா 150 லிட்டர் வீதம் 300 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை தாலுகா கருநெல்லி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் (35), ஆயக்கரைகாடு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (30) ஆகியோர் என்பது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 லிட்டர் சாராயம், 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story