திருக்கோவிலூர் அருகேஏரியில் மண் கடத்தல்; 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே ஏரியில் மண் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன் மோகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜம்படை கிராமத்தில் மண் அள்ளி வந்த டிராக்டரை மறித்து, அதன் டிரைவரிடம் விசாரித்தனர். அதில், அங்குள்ள ஏரியில் இருந்து மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இது தெடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெரியமணியந்தல் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 35), நடராஜன் மகன் தினேஷ்குமார் (23) ஆகியோரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரத்துடன் தப்பி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story