லாரிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது


லாரிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது
x

லாரிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

அறந்தாங்கி:

அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ராஜேந்திரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிப்பர் லாரி டிரைவர் கிருஷ்ணன் (வயது 25), கணேஷ் பிரசாந்த் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து, 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story