சின்னாம்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்
சின்னாம்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன், அமுதகணேஷ் ஆகியோர் என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1630 மற்றும் 29 லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story