புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்


புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
x

செந்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில், செந்துறை பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பஸ்சில் வந்து இறங்கி சந்தேகப்படும்படி சென்ற 2 பேரை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், பிரான்மலை பள்ளபட்டியை சேர்ந்த உதுமான் (வயது 31), சூர்யபிரகாஷ் (27) என்றும், அவர்கள் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story