திருவாலங்காடு அருகே திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு வெட்டு


திருவாலங்காடு அருகே திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு வெட்டு
x

திருவாலங்காடு அருகே திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது.

திருவள்ளூர்

திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள வியாசபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைப்பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைப்பெற்று வந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை அதே கிராமத்தைச் சேர்ந்த தூர்வாசன் மகன் யுவராஜ் (வயது 21) என்பவர் செய்து வந்தார். திருவிழாவின் போது அதே பகுதியை சேர்ந்த அஷ்வின் (22), நரேஷ் (21) ஆகிய இருவரும் யுவராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையயில் அஷ்வின், நரேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து யுவராஜை கத்தியால் வெட்டினர். அப்போது யுவராஜை காப்பாற்ற முயன்ற சதீஷ் (30) என்பவருக்கும் வெட்டு விழுந்தது.

படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து யுவராஜ் திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் யுவராஜை வெட்டிய அஷ்வின், நரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் காலனியை சேர்ந்தவர்கள் கேசவன் (வயது 32) மற்றும் நாயகன் (25). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில் மணவூர் ரெயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ரெயில் நிலைய சாலையில் நடந்து வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த அஜய் (23) மற்றும் சூர்யா (23) ஆகிய இருவரும் கேசவன் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி எதற்காக வேகமாக செல்கிறீர்கள் என தட்டி கேட்டதாக தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 4 பேருக்கும் இடையே கைகலப்பு ஆனது. இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story