கொரோனாவால் 2 பேர் பாதிப்பு


கொரோனாவால் 2 பேர் பாதிப்பு
x

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர்

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 281 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 73 ஆயிரத்து 379 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 895 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே நேற்று வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக கடலூர் மற்றும் அண்ணாகிராமத்தை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. மேலும் நேற்று ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேர், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story