பட்டாசு வெடித்து 2 பேர் காயம்


பட்டாசு வெடித்து 2 பேர் காயம்
x

வாலாஜாவில் பட்டாசு வெடித்து 2 பேர் காயம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை

வாலாஜாபேட்டை ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). நேதாஜி தெருவை சேர்ந்த ரவி மகன் ராஜேந்திரன் (36). இவர்கள் இருவரும் ஆசிரியர் காலனி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் அரசு அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து சிதறியது. இதில் இருவருக்கும் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா தாசில்தார் நடராஜன், ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் வாலாஜா சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வி ஆகி்யோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story