மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்


மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம்
x

வேலூரில் மினிலாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர்கள் அன்பரசு (வயது 39) மற்றும் உதயகுமார் (25). இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பெங்களூரு-சென்னை சர்வீஸ் சாலையோரம் வந்துள்ளனர். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. இதில் தூக்கி எறியப்பட்ட அன்பரசு, உதயகுமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட பொதுமக்கள் மற்றும் வேலூர் வடக்கு போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சுயநினைவு இன்றி இருக்கும் இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story