மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 2 பேர் காயம்


மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்து 2 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Sept 2023 5:15 AM IST (Updated: 2 Sept 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

பஸ் நிலையத்தில் காத்திருந்தபோது மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் பஸ் நிலையத்தில் எப்போதும் பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலான பயணிகள் பஸ் நிலைய நடைமேடையை ஆக்கிரமித்து பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். அதன்படி நேற்று மதியம் பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது திடீரென பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் பஸ்சுக்காக காத்திருந்த ரங்கநாதபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ராஜேஸ்வரி (வயது 18), கல்வார்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் (70) ஆகியோர் காயமடைந்தனர். சக பயணிகள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


Next Story