ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரை வாங்கிய 2 பேர் சிக்கினர்


ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரை வாங்கிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் மூலம் வலி நிவாரண மாத்திரை வாங்கிய 2 பேர் சிக்கினர்

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் ஆன்லைன் மூலமாக வலி நிவாரணி மாத்திரை வாங்கிய 2 பேர் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.

போதைக்கு பயன்படுத்துகிறார்கள்

கோவையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை வாங்கி விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் மருத்துக்கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் சிலர் ஆன்லைன் மூலமாக வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி போதை மாத்திரையாக பயன்படுத்தி வருகின்றனர்.இதனையையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் வாங்கினர்

இந்தநிலையில் கோவை பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த எலெக்டிரீசியன் பிரவீன்குமார் (வயது 25), மகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கோவர்த்தன் (22) ஆகியோர் ஆன்லைன் மூலமாக 200 வலி நிவாரணி மாத்திரைகளை வாங்கி வைத்து இருந்தனர். இந்த தகவல் பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு தெரிய வந்தது.

சோதனை

உடனடியாக போலீசார் தகவல் வந்தவர்களின் வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் சொந்த பயன்பாட்டிற்காக வைத்து இருந்த 200 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story