லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் கைது


லாரியில் எம்.சாண்ட் கடத்திய 2 பேர் கைது
x

நெல்லை அருகே லாரியில் எம்.சாண்ட் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் ரெயில்வே கேட் பகுதியில் முன்னீர்பள்ளம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், லாரியில் உரிய அனுமதிச்சீட்டு இன்றி எம்.சாண்ட் மணலை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரியில் இருந்த மேலநத்தம் மேலத்தெருவை சேர்ந்த அருண் (வயது 54), மேலப்பாட்டம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (36) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாரி மற்றும் 4 யூனிட் எம்.சாண்ட் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story