மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சிலர் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பரிக்கல் பகுதியில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ரமேஷ்(42), கிழக்கு மருதூர் கிராமத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் குமரவேல்(33) ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story