மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2023 12:15 AM IST (Updated: 26 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் வீட்டில் வைத்து மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் வைத்து மதுபாட்டில்களை விற்பனை செய்த செல்வம்(வயது 57), தியாகதுருகம் சந்தைமேடு பகுதியை சேர்ந்த சங்கர்(52) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 21 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story