லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்


லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்
x

லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் சிக்கினர்

மதுரை

கொட்டாம்பட்டி,

கொட்டாம்பட்டி பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கருங்காலக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த திருச்சுனையை சேர்ந்த பொன்னையா (வயது 52), அய்யாபட்டியை சேர்ந்த சங்கரலிங்கம் (48) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story