லாட்டரி விற்ற 2 பேர் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பழனி டவுன் போலீசார், நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, காந்தி மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பழனி சேரன்தெருவை சேர்ந்த பக்கீர் முகமது (வயது 44), பழனி மேற்கு ரதவீதியை சேர்ந்த சேகர் (51) என்பதும், செல்போன் மூலம் ஆன்லைனில் லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire