லாட்டரி விற்ற 2 பேர் கைது

கோவை காந்திபுரத்தில் லாட்டரி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காட்டூர்
கோவை காட்டூர் போலீசார் ரோந்து சென்றனர். காந்திபுரம் அருகே உள்ள 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் வந்தபோது அங்கு சந்தேகத்துக்கு இடமாக 2 பேர் நின்றிருந்தனர். உடனே போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது அவர்கள், காந்திபுரத்தை சேர்ந்த சந்தியாகு (வயது 57), ஹரிதாஸ் (52) என்பதும், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்ததுடன் அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





