கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கோர்ட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள சிவந்திபட்டி பகுதியில் கடந்த 2015-ம் வருடம் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த வலதி (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 4¼ வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததார். இந்தநிலையில் வலதியை கைது செய்ய கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து சிவந்திப்பட்டி போலீசார் வலதியை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.
இதேபோல் நாங்குநேரி பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு கொலை வழக்கில் படுக்கப்பத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்ற முத்து இசக்கி (24) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் கோர்ட்டு விசாரணைக்கு கடந்த 1 வருடங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். அவருக்கு நாங்குநேரி கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இசக்கிமுத்துவை நாங்குநேரி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.