வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 65). இவர் ஆட்டோவில் பூப்பாண்டியபுரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி புதிய முனியசாமிபுரத்தை சேர்ந்த முத்துராஜ் மகன் அந்தோணி சூர்யா (22), மாரிமுத்து மகன் சக்திகுமார் (19) ஆகிய 2 பேரும் கத்தியை காட்டி மிரட்டி ரத்தினத்திடம் இருந்து செல்போனை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணி சூர்யா, சக்திகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அந்தோணி சூர்யா, சக்திகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.


Next Story