மடத்துக்குளம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மடத்துக்குளம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போடிப்பட்டி,
மடத்துக்குளம் அருகே செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் திருட்டு
மடத்துக்குளத்தையடுத்த குளத்துப்பாளையம் அருங்கரை அம்மன் லே அவுட் பகுதியில் வெளி மாநிலத்தொழிலாளர்கள் தங்கியிருந்து கட்டிட வேலைகள் செய்து வருகிறார்கள். இவர்களை என்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தியுள்ளார். அங்கு கட்டுமான வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அங்கஜ்குமார் மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுஜித் ஆகியோர் அங்குள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனர். சம்பவத்தன்று வேலை முடிந்து அவர்கள் அறையில் படுத்து தூக்கியுள்ளனர். அப்போது அங்கஜ்குமார் ரூ. 16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டு தூங்கியதாக கூறப்படுகிறது.
குண்டர் சட்டம்
அதிகாலை 3 மணியளவில் எழுந்து பார்த்த போது கதவு திறந்திருப்பதும் செல்போன் காணாமல் போயிருப்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார், அங்கஜ்குமாரின் செல்போனை திருடியதாக கொழுமம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் சிவா (வயது 20) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாவடி துரை என்பவரது மகன் வசந்த குமார் ( 25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சிவா மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், அவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.