பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
காங்கயம்
காங்கயம் அருகே ரெட்டிபாளையத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி சாந்தி (வயது 40). இவர் நேற்று மதியம் ஸ்கூட்டரில் சாவடிப்பாளையம் சென்றார். அப்போது சாந்தியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்கள் திடீரென்று சாந்தி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் அந்த ஆசாமிகள் தப்பி சென்ற திசை நோக்கி மற்றொரு மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்றனர். அந்த ஆசாமிகளை ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தாண்டாம்பாளையம் பகுதியில் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியை சேர்ந்த தினகரன் (27), அசோக் (23) என்பதும், இவர்கள் சாந்தி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.