மோட்டார்சைக்கிள்களைதிருடிய 2 பேர் கைது


மோட்டார்சைக்கிள்களைதிருடிய 2 பேர் கைது
x

மோட்டார்சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது

திருப்பூர்

பெருமாநல்லூர்,

பெருமாநல்லூர் அருகே உள்ள தொரவலூர் கோட்டை முனியப்பன் கோவில் அருகே மர்ம ஆசாமிகள் நடமாட்டம் இருப்பதாக பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அப்போது அங்கு சுற்றித்திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். இதில் கள்ளக்குறிச்சி சங்கராபுரத்தை சேர்ந்த அருண் (வயது 33), திருப்பூர் அனுப்பர்பாளையம் பெரியார் காலனியை சேர்ந்த முருகேசன்(36) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் திருடியதாகவும் இருவரும் பனியன் கம்பெனியில் ஒன்றாக வேலை செய்ததும் தெரியவந்தது. அவர்களை உடனே போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரும் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அருண், முருகேசன் ஆகியோர் அளித்த தகவலின் பேரில் பெருமாநல்லூர் சேவூர், வரப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து திருடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது.


Next Story