2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
திருப்பூர்
திருப்பூர் வ.உ.சி.நகர் கொடிக்கம்பம் பகுதியில் கடந்த மே மாதம் 30-ந் தேதி முகமது சலீம் என்பவரை தாக்கி கொலை முயற்சி செய்ததாக திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த பாண்டியராஜன் (வயது 25), திருப்பூர் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்த சக்தி சண்முகம் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாண்டியராஜன் மீது 7 வழக்குகளும், சக்தி சண்முகம் மீது 4 வழக்குகளும் உள்ளன.
2 பேரும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவிட்டார். அதன்படி, கோவை மத்திய சிறையில் உள்ள பாண்டியராஜன், சக்தி சண்முகம் ஆகியோரை ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று உத்தரவு வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 55 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.






