மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 பேர் பலி
x

பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்

பொங்கலூர், செப்.12-

பொங்கலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து ேபாலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விபத்து

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரிப்புத்தூரை அடுத்த எஸ்.பி.வடுகபாளையத்தைச் சேர்ந்த ராமன் என்பவரது மகன் சதீஷ் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரது மகன் புவன் சங்கர் (19). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் உடுமலை-திருப்பூர் சாலையில் பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை சதீஷ் ஓட்டி வந்தார். இவர்கள் நேற்று இரவு பொங்கலூரை அடுத்த வாவிபாளையம், கருப்பராயன் கோவில் அருகே வந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

2 பேர் பலி

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு புவன்சங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த சதீசை பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீசும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய காைர ஓட்டி வந்த உடுமலை லிங்கமாயநாயக்கன்புதூரை சேர்ந்த பன்னீர்செல்வத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் விபத்தில் இறந்து போன சம்பவம் அந்த பகுதியில் வரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-


Next Story