உடுமலை அருகே பாலத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி.
உடுமலை அருகே பாலத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
உடுமலை அருகே பாலத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த கொமரலிங்கம் இந்திரா தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவர் மகன் சஞ்சய் (வயது 21). இவர் உடுமலையில் உள்ள தனியார் இருசக்கர வாகன உதிரிபாக கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரது மகன் டிரைவர் ராகுல் (20). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் மலையாண்டி கவுண்டனூருக்கு சென்றனர்.
அங்கு வேலையை முடித்துக் கொண்டு இருவரும் ெகாமரலிங்கத்திற்கு வந்து ெகாண்டிருந்தனர்.
2 பேர் பலி
இவர்களது மோட்டார்சைக்கிள் கருப்பட்டிபாளையம் அருகே வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் அங்கிருந்த பாலத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு சஞ்சையும், ராகுலும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் சஞ்சய் இறந்து விட்டார். கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக ராகுல்
சிகிச்சையில் இருந்து வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராகுல் நேற்று மதியம் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிள் விபத்தில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.