2 பேர் அதிரடி கைது
வத்திராயிருப்பில் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 ேபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 ேபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
நாட்டு துப்பாக்கி பறிமுதல்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மறவர் தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 38) என்பவரது வீட்டில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு துப்பாக்கிகள், 21 தோட்டாக்கள், 57 வெடி மருந்து நிரப்பப்படாத தோட்டாக்கள் ஆகியவற்றை வத்திராயிருப்பு போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் ஏ.டி.எஸ்.பி. சோமசுந்தரம், துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு பழனிகுமார், நில அபகரிப்பு துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயகுமார் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
போலீசாருக்கு சரவணகுமார் அளித்த தகவலின் பேரில் கூமாப்பட்டி கிழவன்கோவில் பகுதியை சேர்ந்த வனராஜ் (58) என்பவரிடம் இருந்து 1 நாட்டு துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரையும் கைது செய்தனர்.
இவர்களுக்கு தோட்டக்களுக்கான வெடி மருந்து வினியோகம் செய்த திண்டுக்கலை சேர்ந்த நிகில்(32) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.