தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 42) கட்டிட மேஸ்திரி. இந்த நிலையில் இவர் திருச்சி காமராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களாக உடல்நலம் சரியில்லாததால் அவர் பணிக்கு செல்லவில்லை. இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் திருச்சி ஏர்போர்ட் கக்கன் காலனி பகுதியைச் சேர்ந்த விக்ரமன் (30), மணிகண்டன் (25) ஆகியோரை வைத்து பணியினை செய்துள்ளார். இந்த நிலையில் 2 நாட்கள் கழித்து பணிக்கு வந்த மாணிக்கம் அந்த வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த விக்ரமன், மணிகண்டன் ஆகியோரிடம் நான் பணி செய்து கொண்டிருந்த வீட்டில் நீங்கள் பணியை தொடர்வது நியாயமா? என கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து மாணிக்கத்தை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரமன், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.