தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது


தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
x

தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). கூலி தொழிலாளி. இவரது சகோதரர் ஹரிஷ்குமாருக்கும், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த மாயகிருஷ்ணன் (50) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அருண்குமார் அந்த தகராறை விலக்கி விட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் சென்று விட்டனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பாபாகோவில் அருகே அருண்குமார் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாயகிருஷ்ணன், முருகன் (42), பாலன் (55) ஆகிய 3 பேரும் சேர்ந்து அருண்குமாரை உருட்டுக் கட்டை மற்றும் அரிவாளால் தாக்கி உள்ளனர்.

இதில், காயம் அடைந்த அருண்குமார் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, மாயகிருஷ்ணன், முருகன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய பாலனை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story