ஆள்மாறாட்டம் மூலம் நில மோசடி செய்த 2 பேர் கைது


ஆள்மாறாட்டம் மூலம் நில மோசடி செய்த 2 பேர் கைது
x

ஒரத்தநாடு அருகே ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு அருகே ஆள் மாறாட்டம் செய்து நில மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

10 சென்ட் நிலம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருவிழிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது70). இவருக்கும், இவருடைய அண்ணன் செல்லமுத்துவுக்கும் பொதுவான 10 சென்ட் நிலம் ஒக்கநாடு கீழையூர் முதன்மை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் பட்டா எனது அண்ணன் செல்லமுத்து பெயரில் உள்ளது. இந்தநிலையில கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந் தேதி திடீரென காணாமல் போய்விட்டார்.

இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினாலும், அவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஒக்கநாடு கீழையூர் முதன்மை கிராமத்தில் உள்ள 10 சென்ட் நிலத்தை செல்லமுத்து மகன் ஜெய்சங்கர் (42) அபகரிப்பதற்காக சமையன்குடிகாடை சேர்ந்த நடராஜனை (61) ஆள் மாறாட்டம் செய்ய தயார்படுத்தினார்.

நிலமோசடி; 2 பேர் கைது

இதையடுத்து, ஒரத்தநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் 6-ந் தேதி நடராஜனை தனது தந்தை என கூறி, கையெழுத்திட வைத்து போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்து 10 சென்ட் நிலத்தை ஜெய்சங்கர் தனது பெயருக்கு மாற்றினார். பின்னர், இந்த நிலத்தின் பத்திரத்தை மன்னார்குடியில் உள்ள வங்கியில் வைத்து பணம் வாங்கினார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சவுந்தரராஜன் புகார் செய்தார். இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டுஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார். இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஜெய்சங்கர், நடராஜன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.


Next Story