மணல் கடத்திய 2 பேர் கைது
மணல் கடத்திய 2 பேர் கைது
திருவாரூர்
கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் கோரையாற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனியாண்டி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனை மேற்கொண்டனர். அதில் மணல் கடத்தி வந்ததும், டிராக்டருக்கு வாகன பதிவு எண் இல்லாததும் தெரியவந்தது. பின்னர் அதில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குமட்டி திடல் வெள்ளம் தாங்கி தெருவை சேர்ந்த அன்பழகன் (வயது38), வீரமணி (40) ஆகியோர் என்பதும், மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதுகுறித்து பெருகவாழ்ந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story