தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
தூத்துக்குடியில் வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்த சேவியர் செல்வராஜ் மகன் அந்தோணி தாமஸ் (வயது 20). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் 14 வயது சிறுவனை தாக்கியுள்ளார். இதை தூத்துக்குடி தாளமுத்துநகர் ராமதாஸ் நகரை சேர்ந்த வேலர் மகன் தொம்மைராஜ் (29), அவரது உறவினர் சுரேஷ் (25) ஆகியோர் கண்டித்து உள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்தோணி தாமஸ், நண்பர்களான டி.சவேரியார்புரத்தை சேர்ந்த துரை மகன் சந்தோஷ் (19), ஜேம்ஸ்ராஜ் மகன் தினேஷ் (21), அந்தோணி ராஜன் மகன்களான வினோத்ராஜன் (20), பிரதீப் (21) ஆகிய 5 பேரும் சேர்ந்து தொம்மைராஜ் மற்றும் அவரது உறவினர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியும், செங்கலால் தாக்கியும் மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிவு செய்து தினேஷ், வினோத்ராஜன் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.