2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்


2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
x

பறவைகளை வேட்டையாட முயன்ற 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் பகுதியில் பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகை வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர் தேத்தாகுடி தெற்கு வயல்வெளிகளில் வேட்டை தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த இளங்கோவன்(வயது40), சிவகுமார் ஆகிய 2 பேர் பறவைகளை வேட்டையாட முயன்றனர். இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story