சிவகாசியை சேர்ந்த 2 பேர் கைது


சிவகாசியை சேர்ந்த 2 பேர் கைது
x

சிவகாசியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்


விருதுநகர் தொழில் அதிபர் குமரவேல் கொலை வழக்கில் தனிப்படை போலீசார் ஏற்கனவே 6 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று சிவகாசி அண்ணா காலனி 8-வது தெருவை சேர்ந்த தங்கமுனீஸ் (வயது 26), சிவகாசி பள்ளப்பட்டி விவேகானந்தா காலனியை சேர்ந்த முருகானந்தம் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் கவிதா அவர்கள் 2 பேரையும் வருகிற 14-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 2 பேரும் மதுரை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தநிலையில் ஏற்கனவே மதுரை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்த மையிட்டான் பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஞானசேகரன், விக்ரமன் ஆகிய 2 பேரும் நேற்று விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் கவிதா அவர்கள் 2 பேருக்கும் வருகிற 14-ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story