வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது


வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்திய பெண் புரோக்கர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோயம்புத்தூர்

சிங்காநல்லூர்

கோவை சிங்காநல்லூரில் வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடப்ப தாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் ஒரு பெண் உள்பட 2 பேர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, சென்னையை சேர்ந்த விபசார புரோக்கர் மோனல் (வயது 41), கோவையை சேர்ந்த சிரஞ்சீவி (24) என்பதும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து 23 வயது பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியதும் தெரிய வந்தது. உடனே போலீசார் மோனல், சிரஞ்சீவி ஆகிய 2 பேரை கைது செய்தனர். விபசாரத்துக்கு பயன்படுத்திய 23 வயது பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story