வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது


வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 July 2023 10:58 PM IST (Updated: 24 July 2023 1:12 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி காவாக்கரை பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் விபசாரம் நடைபெறுவதாக வாணியம்பாடி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி, சப்- இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும், திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவரும் காவாக்கரை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவரையும், அவருக்கு உதவியாக இருந்த நாட்டறம்பள்ளி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்கி என்பவரை தேடி வருகின்றனர். அங்கிருந்து மீட்கப்பட்ட ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண்ணை திருப்பத்தூர் பகுதியில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

1 More update

Next Story