தொழிலாளி உள்பட 2 பேர் படுகாயம்


தொழிலாளி உள்பட 2 பேர் படுகாயம்
x

தொழிலாளி உள்பட 2 பேர் படுகாயம்

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் ராஜசேகர்(வயது 29). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் தனது அத்தையான லதா(39) என்பவரை அழைத்துக்கொண்டு கிணத்துக்கடவு அருகே கொண்டம்பட்டி நோக்கி சென்றார். லட்சுமி நகர் பகுதியில் தனியார் கோழிப்பண்ணை அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ராஜசேகர், லதா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த கொண்டம்பட்டியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story