34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்- பெண் உள்பட 2 பேர் கைது


34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்-  பெண் உள்பட 2 பேர் கைது
x

34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்

திருநெல்வேலி

நெல்லை அருகே தாழையூத்து போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாழையூத்து சரஸ்வதி நகரை சேர்ந்த உமா (வயது 33) மற்றும் தச்சநல்லூரை சேர்ந்த முத்துவேல் (49) ஆகிய‌ இருவரும் தாழையூத்து தனியார் பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து உமா மற்றும் முத்துவேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தார். அவர்களிடமிருந்து 34 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story