பெண் உள்பட 2 பேர் கைது


பெண் உள்பட 2 பேர் கைது
x

பெட்டிக்கடையில் மதுபானம் குடிக்க அனுமதித்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

போடி நகர் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குலாளர்பாளையம் தண்ணீர் தொட்டி அருகே உள்ள பெட்டிக்கடையில் அமர்ந்து சிலர் மதுபானம் குடித்து கொண்டிருந்தனர். இதனையடுத்து மதுபானம் குடிப்பதற்கு கடையில் அனுமதி அளித்த பாக்கியலட்சுமி (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சுப்புராஜ் நகர் புதுக்காலனியில் உள்ள பெட்டிக்கடையில் மதுபானம் குடிக்க அனுமதி அளித்ததாக அப்பகுதியை சேர்ந்த காமராஜ் (68) கைது செய்யப்பட்டார்.


Next Story