வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது


வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
x

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் வெம்பாக்கம் அப்துல்லாபுரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் வாகனத்தை போட்டுவிட்டு தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஆரணி தாலுகா ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த வினோத் (வயது 24), பிரபாகரன் (24) என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் மீது திருட்டு உள்ளிட்ட 3 வழக்குகள் நிலவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story