கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த 2 பேருக்கு வலைவீச்சு


கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த 2 பேருக்கு வலைவீச்சு
x

அவ்வையார்பட்டியில் கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

புதுக்கோட்டை

கரும்பு தோட்டத்திற்கு தீ வைப்பு

விராலிமலை தாலுகா, அவ்வையார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாயுமான் (வயது 60), விவசாயி. இவர் தனது நிலத்தில் கரும்பு பயிரிட்டு இருந்தார். இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த தாயுமானின் உறவினர்களான சிவனடியான் என்பவரது மகன்கள் ஹரிஹரன், சிவக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் தாயுமானின் கரும்பு தோட்டத்திற்கு சென்று இதில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்று தகராறு செய்துள்ளனர்.

பின்னர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு கரும்பு தோட்டத்தை சேதப்படுத்தியதுடன் கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்துள்ளனர். அப்போது அதை தடுக்க வந்த விவசாயி தாயுமானை ஹரிஹரன், சிவக்குமார் ஆகிேயார் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

2 பேருக்கு வலைவீச்சு

கரும்பு தோட்டம் தீ பிடித்து எரிந்ததில் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள கரும்புகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் மண்டையூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து கரும்பு தோட்டத்திற்கு தீ வைத்ததுடன், விவசாயி தாயுமானை தாக்கிய ஹரிஹரன், சிவக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story